Advertisment

"இன்னும் 27 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சியை பிடிக்கும்" - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

fhg

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் 2024ம் ஆண்டு அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், "அதிமுக இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் 2024ம் ஆண்டு அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். 2024ம் ஆண்டு வர இன்னும் 27 அமாவாசை தான் உள்ளது. திமுகவின் மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் அதிமுகவினர் அஞ்ச மாட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்ள கூடாது" என்றார்.

ops_eps
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe