Edappadi did not participate in the consultation with Prime Minister Modi ...?

இந்தியாவில் கரோனாபாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ராமாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில்இன்றிலிருந்து(17.03.2021) 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது இரவு 1௦ மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் கரோனாஅதிகரித்து வருவதைதொடர்ந்து, மக்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் இரவு நேர ஊரடங்குஅமல்படுத்தப்படும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்கரோனாதடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும்பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று (17.03.2021) மதியம் 12.30 மணிக்கு காணொளி மூலம் ஆலோசிக்கவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிகலந்துகொள்வார்என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரதமருடனான ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் கலந்துகொள்ளப்போவதில்லைஎன்ற தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவருக்குப் பதிலாகதலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதமருடனானஆலோசனைக்கூட்டத்தில் பங்குகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisment