Advertisment

ஏன் எடப்பாடி தான் ஆடுவாரா? நாங்களும் ஆடுவோமே..! (படங்கள்)

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சேலத்தில் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் விளையாடி பல போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கிராமத்தில் ஒரு தனியார் அமைப்பான கே எஸ் கிரிக்கெட் அகாடமி என்ற அமைப்பு 11 வயது முதல் 15 வயதுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டியை புதன்கிழமை நடத்தியது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியை தொடங்கி வைத்த கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, நானும் கிரிக்கெட் ஆடுவேன் என்றார். அப்போது அங்கிருந்த விளையாட்டு வீரர்கள் நீங்கள் பந்தை எடுத்துக் கொடுங்கள் என்றார்கள். இல்லை... இல்லை... நான் பந்தை எடுத்தும் கொடுப்பேன், கிரிக்கெட்டும் ஆடுவேன் என்றார்.

Advertisment

ஆச்சரியப்பட்ட அவர்களை பார்த்து அவர்களிடம் பேசிய கவிதா, "ஏன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் கிரிக்கெட் ஆடுவாரா? நாங்கள் எல்லாம் ஆட மாட்டோமா?'' என்று கூறிவிட்டு, ''போடு பந்தை'' என்று அவர் கிரிக்கெட் ஆடினார். அவர் அடித்த ஒவ்வொரு பந்தும் 4 ரன்கள் பெற்றது. அதேபோல் அவர் மூன்று பந்துகள் வீசியபோது, மூன்றாவது பந்தில் போல்ட் அவுட் ஆனது. இது பார்ப்போரை மிகவும் சிலிர்க்க வைத்தது. இறுதியில் 200 இளைஞர்கள் ஆடிய அந்த கிரிக்கெட்டில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட விளையாட்டு போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.

Erode cricket Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe