113-வது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். சிலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்துக்கும் மலர் தூவினர். இதனைத் தொடர்ந்த, பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.