/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps ok124563_5.jpg)
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னையில் உள்ள அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2011ஆம் ஆண்டு முதல் தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்ற தமிழக அரசு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பங்களாவைக் காலி செய்யத் தொடங்கிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். எனினும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களைக் காலி செய்த நிலையில், புனரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. புனரமைப்பு பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களைப் பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது
Follow Us