/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Saravanan.jpg)
திருச்சியில் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் இன்று காலை புவனா என்பவர் கொடுத்த புகாரில், என்னுடைய கணவர் பெரியார் சரவணன் வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர். இன்று காலையில் என்னுடைய வீட்டிற்கு அடையாளம் தெரிந்த இரண்டு பேர் வந்து என் கணவரை தேடி வந்தார்கள். நான் அரசு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார் வந்திடுவார் என்று சொன்னேன். அதன் பிறகு எனது கணவரை காணவில்லை. மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த போது யாரோ ஒரு கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்தி சென்றிருக்கிறார்கள் என்று அங்கிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். என் கணவரை மீட்டுத் தாருங்கள் என்று இருந்தது.
புகாரை பெற்றதும் ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் தலைமையில் அரசு மருத்துவமனைக்குச் சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையில் சென்னை திருவல்லிக்கேணி போலிசார் வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது உறுதியானது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எழுவர் விடுதலை குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக முதல்வர் மீது விமர்சனம் வைத்து பேசியதற்காக அவதூறு வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)