Advertisment

"எங்களுக்கும் நடிக்க தெரியுமில்லே.." - சேலத்தில் நடிகரான முதல்வர் எடப்பாடி..!

தமிழக முதல்வர் நாற்காலியை தக்க வைக்க வேண்டுமென்றால் டெல்லி தயவு மட்டுமல்ல நடிப்பு கலையும் தேவைப்படுகிறது.

Advertisment

'ஜெ' வழியில் ஆட்சி புரிவதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி 'ஜெ' வை போலவே காவல்துறையை வைத்து மக்கள் மீதான அடக்கு முறையை கட்டவிழ்த்து வருகிறார். அது ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரை குடித்ததும் சரி,எட்டு வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளானாலும் சரி, போலீசை வைத்தே மிரட்டும் இந்த போக்கு 'ஜெ' வழி ஆட்சிதான் என்பதை நிரூபித்து வருகிறார்.

ஜெ வை போலவே அமைச்சர்கள், அதிகாரிகள் பூங்கொத்து கொடுப்பது பயணங்களில் அதிக போலீசாரை பாதுகாப்பில் ஈடுபட வைப்பது. மக்கள் வரவேற்ப்பது போல மகளிர் அணிக்கு ஒரே கலர் புடவையும் பணமும் கொடுத்து பூர்ண கும்ப மரியாதை பெறுவது இந்த வரிசையில் இப்போது 'ஜெ' வின் நடிப்பு கலையிலும் இறங்கியுள்ளார் என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

publive-image

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செல்லும் இடங்களில் வயதான பாட்டிகளை வாஞ்சையுடன் அனைத்து அன்பை தெரிவிப்பார். அதே போல குழந்தைகளை வாரி அணைப்பார், இதே போலத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் பொது நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதும் குழந்தைகளை அன்போடு அணைத்து முத்தமிடும் காட்சிகளும் நடக்கும். இப்படித்தான் 30ந் தேதி சனிக்கிழமை சேலத்தில் நடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் விமான நிலையத்தில் இறங்கியதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை வரவேற்க, தொடர்ந்து அங்கு கொண்டு வரப்பட்ட பெண்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்தனர். அதில் ஒரு பெண் ஒரு வயது பெண் குழந்தையை இடுப்பில் வைத்திருக்க "ஜெ' பானியில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி "அடடே... கண்ணு உன் பேரு என்ன என கொஞ்ச தொடங்கினார். இதை சற்றும் எதிர்பாராத குழந்தை மிரள தொடங்கியது. குழந்தையை கொஞ்சி விட்டு அந்த ஒரு வயது குழந்தையிடம் நல்லா படி. என சொல்லி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், ரஜினி, கமலுக்கு தான் நடிக்க தெரியுமா...? அண்ணன் எடப்பாடியும் தூள் கிளப்புகிறார் என ர.ர.க்கள் கமெண்ட் கொடுத்தனர்.

eps jayalalitha kamal rajini Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe