Advertisment

மறு சீராய்வு மனுவா? அவமதிப்பு வழக்கா? அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

edappadi palanisamy

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். எதற்காக இந்த ஆலோசனையை இவர்கள் நடத்தினார்கள் என்பது குறித்து விசாரித்தோம்.

Advertisment

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயலாளர் சாய்குமார், தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைமை பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளை இவர்கள் சந்தித்து விவாதிப்பார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் தமிழக அதிகாரிகள் மத்திய அரசின் உயர் அதிகாரிகளை யாரையும் சந்திக்கவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகியிருப்பவர் சேகர் நாப்தே. அந்த வழக்கறிஞரிடம் இவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் மறுசீராய்வு மனு போடலாம் அல்லது அவமதிப்பு வழக்கு போடலாம் என்று விவாதித்துள்ளனர். இதற்கு சேகர் நாப்தே, அவமதிப்பு வழக்கு போடுவதற்கு முகாந்திரம் இல்லை. தீர்ப்பில் போர்டு என்று சொல்லவில்லை. ஆகையால் மறுசீராய்வு மனு போடலாம் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்தே, தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மறுசீராய்வு மனு போடலாமா அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமா என்று ஆலோசித்ததுடன், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.

Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe