Published on 12/02/2019 | Edited on 12/02/2019

ஏழைக்குடும்பங்களுக்கு 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதையடுத்து இன்று அந்த உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்று திமுக எம்.எல்.ஏ பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’இந்த மாத இறுதிக்குள் ஏழைக்குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் செலுத்தப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களூக்கு வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படும்’’என்று தெரிவித்தார்.