Skip to main content

''கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர்''-  எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

 Stalin mourns MP Vasantha Kumar's death

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 9 -ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு கரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று மாலை 7 மணியளவில் அவர் காலமானார்.

கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் அன்பைப் பெற்றவர். விற்பனையாளராக வாழ்க்கை பயணத்தைத் தொடங்கி தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர். ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியவர் வசந்தகுமார். அவரின் இழப்பு, காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்