ிு

அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து இன்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

Advertisment

பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, " சட்டமன்ற விதியின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற பதவிகள் எல்லாம் அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்தக் கொடுக்கும் பதவிகள். சபையில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது குறித்து முடிவெடுப்பது பேரவைத் தலைவரின் முழு விருப்பம்தான். அதில் யாரும் தலையிட முடியாது" என்று கூறினார்.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், " அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மக்கள் பிரச்சனை எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு இடம் பிர்ச்சனைக்கு சண்டையிட்டு வருகிறார்கள். எந்த இடத்தில் யார் அமர்ந்தால் இவர்களுக்கு என்ன. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கூட முன்வரிசையில் இடம் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் 4 வருடங்களாக ஆட்சியிலிருந்தவர்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சபாநாயகரின் உரிமை. அதில் இவர்கள் தலையிட உரிமையில்லை" என்றார்.