Advertisment

கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

edappadi palanisamy

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (12.01.2019) காலை ஆலோசனை நடத்தினர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

Advertisment

கொடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. மறைந்த ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். வீடியோ ஆவணம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தவறான செய்தி வெளியிட்டவர்கள், வீடியோ விவாகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது விரைவில் கண்டறியப்படும். கொடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.

Edappadi Palanisamy interview Kodanad Estate
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe