Advertisment

'ஒரு இடத்தில்கூட எடப்பாடி வெற்றி பெற முடியாது'- ஓபிஎஸ் பேட்டி

'Edappadi cannot win even in one place' - OPS interview

Advertisment

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளருமான சுப்பிரமணி முன்னிலை வைத்தார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணி ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடந்த பத்தாண்டு காலம் இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் .

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை. இந்த தேர்தலில் பத்தாண்டு காலமாக சிறப்பாக ஆட்சி செய்த பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலுப் பெற்று இருக்கிறது ஆகவே பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி இந்தியாவை ஆள முடியாது. ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லை. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. . எங்களுடன் யார் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜக தான் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளது'' என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe