அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் எட்டாவது நினைவு தினம் இன்று (05/12/2024) அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அதிமுக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் அதிமுகவின் மூத்த நிர்வாகிபொன்னையன்கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''எம்ஜிஆரினுடைய அரசியல் வாரிசு ஜெயலலிதா. அவருடைய தனி சொத்து இரட்டை இலை. எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இருவருடைய அரசியல் வாரிசாக தமிழகமெங்கும் நடைபோட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அவருடைய சொத்து இரட்டை இலை. அதற்கு யாரும் உரிமைகோர முடியாது. சட்டத்திலும் வெல்ல முடியாது.
2026 இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்டாயம் அதிமுக ஆட்சி மலரும். உயர் நீதிமன்றம்தெரியாமல் சொல்லி இருக்கிறார்கள். காரணம் இரட்டை இலையைபொறுத்த வரைக்கும் ஒரு கட்சியினுடைய அதிகப்படியான உறுப்பினர்களுக்கு சொந்தமானது. ஒன்றிய அளவில், நகர அளவில், ஊராட்சி அளவில், கிராம அளவில் நடைபெற்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வந்தது.எம்ஜிஆரால்துவக்கப்பட்ட அதிமுகவை எதிர்த்து பல சூழ்ச்சிகளை கொலைகளை, கொள்ளைகளை, தமிழகத்தில் நகர்த்தி தமிழக மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை தந்த எடப்பாடி (என சொல்லிய பொன்னையன் பின்னர் அதை அப்படியே மாற்றி) எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அடுக்க முடியாத தொல்லைகளை வீசி வீசி வாரி இறைத்த ஸ்டாலின் படத்தை அவருடைய வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ளார். எங்க அப்பா விளக்கு ஏற்றுவார் சூடம் கொளுத்துவார் என்று சட்டப்பேரவையிலேயே கலைஞரை கடவுள் என்று உயர்த்திய ஓபிஎஸ்-ஐ அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். நீதிமன்றத்திற்கு அது தெரியாது. தேர்தல் ஆணையம் தெளிவான முடிவை சொல்லும்'' என்றார்.