இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு அல்வா- விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில்அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

 Edapady Palanisamy talk at Vikravandi!

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கொக்கரித்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த இடைத்தேர்தல். யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுகதான். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெறவில்லை. ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதற்கானஅங்கீகாரத்தை இடைத் தேர்தல் மூலம் மக்கள் வழங்கியுள்ளனர். இடைத்தேர்தல் மூலம் மக்கள் அதிமுக அரசை விரும்புவதை நிரூபித்துள்ளனர். அதிமுகவின் கூட்டணி பலம் பொருந்தியது யாரும் அதனிடம் நெருங்க முடியாது. ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறமால்போராட்டங்களை தூண்டி விடுகிறார். ஸ்டாலின்ஸ்டாலின் எண்ணங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் மூலம் நிராசையாகியுள்ளது. போக்குவரத்து துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விருது பெற்று வருகிறது அரசு எனக்கூறினார்.

admk byelection eps stalin Tamilnadu Vikkiravandi
இதையும் படியுங்கள்
Subscribe