இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

nanguneri

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசுகிறார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு கலைஞரும், அவருடைய மகன் ஸ்டாலினும் போட்ட வழக்குதான் காரணம். இவர்கள் போட்ட பொய் வழக்கின் காரணமாகதான், அவர் சிறைக்கு சென்றார். அதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார். ஆனால், ஸ்டாலின் இன்று மக்களை ஏமாற்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

Advertisment

இன்று நாம் தான் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதாவின் ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதாவின் மறைவுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். அவர்தான் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு பொய்யான தகவலை வழங்கியவர். இன்று ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விட்டதா? ப.சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதா குறித்து கனிமொழி வசை பாடி வருகிறார். அவரும் திகார் சிறையில் அடைபட்டு இருந்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது” என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார்.