Advertisment

ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்... இலங்கை தமிழர்களுக்கு திமுக செய்தது என்ன? -எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Advertisment

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாட்டில் பல்வேறு இடங்களில் மசோதாவை திரும்பபெறவேண்டும் என அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

edapadi palanisamy interview

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எந்தவிதமான பாதிப்புஇல்லை என மோடியும், அமித்ஷாவும் விளக்கமளித்துள்ளனர்.முன்னாள் முதல்வர்ஜெயலலிதா இருந்தபொழுது மோடியை சந்தித்து இலங்கை தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். அவர் மறைவுக்கு பிறகுஅதேபோல் நானும் மோடியை சந்தித்து அதே கருத்தை வலியுறுத்தியுள்ளேன். ஆனால் திமுக தலைவர்ஸ்டாலினோ வேண்டுமென்றே அதிமுக இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக தொடர்ந்து பொய் பேசி வருகிறார்.

நேற்றைய தினம் கூட காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்கீழத்தரமாகபேசியிருக்கின்றார். 2009 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய மத்திய அரசாக இருந்த காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுக அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தது. அப்பொழுது இலங்கையில் நடைபெற்ற போரை நிறுத்தஅப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். ஒரு மணிநேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர்சொல்லியதை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த தமிழ் மக்கள் ஒன்றரை லட்சம் பேர் திட்டமிட்டு சுடப்பட்டுகொல்லப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வதை போல நாடகமாடும் ஒரே கட்சி திமுகதான். அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது குரல் கொடுக்காமல் மவுனம் சாதித்துவிட்டு இப்பொழுது பேச தகுதியில்லை.மகன் பதவியில் இருக்க வேண்டும், குடும்ப உறுப்பினர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் இதுதான் அவர்களின் நிலைப்பாடு. 13 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக ஏன் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவில்லை. நாங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை இருந்தாலும் இலங்கை தமிழர் குடியுரிமை பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இப்போது கூக்குரல் கொடுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

உள்நாட்டிலேயே தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்து தெரிந்துகொண்டோம். ஆனால் அதேநேரத்தில் திமுக எம்பி கனிமொழி, டி.ஆர் பாலு ஆகியோர் ராஜபக்சேவை சந்தித்து அவர் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு, கொடுத்த பரிசினை வாங்கிக்கொண்ட கட்சிதான் திமுக என்றார்.

stalin admk TAMILAN srilanka edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe