Skip to main content

எல்ஈடி பல்ப் மோசடி; அதிமுக, பாஜக பொருளாளர் வீடுகள் உள்பட 5 இடங்களில் ரெய்டு

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
ED raids 5 places including AIADMK and BJP treasurer houses

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் இவர் கிராம ஊராட்சி செயலராக வேலை செய்தவர் புதுக்கோட்டை ஏ.டி அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றினார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் வேலுமணியுடன் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவரது சகோதரர் பழனிவேல், ரவிச்சந்திரன், ஆலங்குடி பழனிவேல் மற்றும் பலர் பெயர்களில் போலியான நிறுவனங்கள் உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் எல்ஈடி பல்புகள், கொரோனா  பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ED raids 5 places including AIADMK and BJP treasurer houses

இந்த நிலையில் முருகானந்தம் இந்த வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் மூலம் பாஜகவில் இணைந்து மாவட்டப் பொருளாளராக உள்ளார். அவரது சகோதரர் அதிமுகவில் உள்ளார்.

ED raids 5 places including AIADMK and BJP treasurer houses

இந்த நிலையில் இன்று கடுக்காக்காடு கிராமத்தில் பாஜக முருகானந்தம், அதிமுக பழனிவேல், ரவிச்சந்திரன் வீடுகள் மற்றும் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீடு, இவர்களுடன் இணைந்திருந்த ஆலங்குடி கேவிஎஸ் நகர் பழனிவேல் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்