ED Raid in Karur continues more then 23 hours.

Advertisment

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம், தனியார் டைல்ஸ் ஷோரூம் உரிமையாளர் வீடு மற்றும் கடை ஆகிய நான்கு இடங்களில் நேற்று காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். நேற்று மாலை அமைச்சரின் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நிறைவடைந்தது.

ஆனால், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான செராமிக்ஸ் கடை மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவிலும் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று காலை 9 மணிக்குத்தொடங்கிய சோதனையானது, தொடர்ந்து 23 மணி நேரத்திற்கும் மேலாக இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் இரண்டாவது நாளும் தொடர்கிறது.