நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024) விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் பழிவாங்கல்நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijayabaskar
இதையும் படியுங்கள்
Subscribe