Advertisment

ஈ.சி.ஆர். சம்பவம் : 6 பேர் கைது; 2 கார்கள் பறிமுதல்!

ECR Incident 6 people arrested 2 cars confiscated!

சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி (25.01.2025) இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் மற்றும் அச்சமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்குச் சென்று வீட்டை அடைந்தனர்.

Advertisment

அதே சமயம் இளைஞர்களும் அவர்களின் காரை கொண்டு துரத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கானத்தூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்களின் உரிமையாளர்கள் மாற்றப்பட்டதால் காரை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். இத்தகைய சூழலில் தான் தாம்பரத்தில் ஒரு காரையும், பொத்தேரியில் மற்றொரு காரையும் போலீசார் நேற்று (30.01.2025) பறிமுதல் செய்தனர். அதோடு கல்லூரி மாணவர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று (31.01.2025) அதிகாலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கல்லூரி மாணவர் உட்பட 6 பேராக உயர்ந்துள்ளது. மேலும் இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

arrested car ecr incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe