காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலை: ஜக்கி வாசுதேவ்

jakki vasudev

காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என ஜக்கி வாசுதேவ் கவலை தெரிவித்துள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.

நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என அவர் தெரிவித்துள்ளார்.

Baba Ramdev H Raja jakki vasudev sterlite protest
இதையும் படியுங்கள்
Subscribe