பலத்த மழை காரணமாக தமிழகத்தில் திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த தற்போதுநிலையில் நான்காவதாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ASDSDSDSDS.jpg)
திருச்சியில் லால்குடி, புள்ளம்பாடி, கல்லகுடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர்,திருப்பனந்தாள்பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் மதுரையில் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு, அழகர்கோயில். திருவாரூரில், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம்,குடவாசல், கொரடாச்சேரி. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் தேனி, புதுக்கோட்டை,மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பொழிந்து வருகிறது.
Follow Us