/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4026.jpg)
வரும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் விமானங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை எதிரொலியாக பயணிகள் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் இடையிலான கட்டணம் 2,800 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் கொச்சின் நகருக்கான கட்டணம் 3,000 இருந்து சுமார் 16,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை-தூத்துக்குடி இடையிலான விமான கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னை-மதுரை இடையிலான கட்டணம் 3,314 ரூபாயிலிருந்து 10,192 முதல் 17,950 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னை-கோவை இடையிலான கட்டணம் 3,315 ரூபாயிலிருந்து 14 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)