கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையாகவே புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதல்வர் அலுவலகம், அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. குறிப்பாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு மட்டும் இதுவரை 6 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. மிரட்டல் விடும் நபரை பிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீசாரே திணறி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று பேக் கிடந்த சம்பவம் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்த போலீசார்ஆய்வு செய்தனர். உள்ளே ஏதேனும் மர்மப் பொருள் இருக்கலாம் என்பதால் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.