Advertisment

'நிவர்' புயல் எதிரொலி... மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

Echo of Nivar storm ... Medical consultation postponed!

நாளை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.நாளை தீவிரப் புயலாகவும் மாறி வடமேற்குத் திசையில்நகர்ந்து, தற்போதைய நிலவரப்படி, வரும் 25 ஆம் தேதி பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் 26 -ஆம் தேதி வரை, மழை நீடிக்கும். அதேபோல் புயல் கரையைக்கடக்கும் பொழுது 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு, 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறவிருந்த கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'நிவர்' புயல்காரணமாகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் மாணவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு தேதிமாற்றம் குறித்த தகவல்கள்மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Medical Student thunderstrom
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe