Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி:வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு... நக்கீரனுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!!    

கடந்த 24-ந்தேதி ''கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போகுதே'' -வேதனை கண்ணீரில் விவசாயிகள்!! என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நார்க்கரவந்தன்குடி, சித்தலப்பாடி, பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் பயிர் செய்துள்ளனர். நெற்பயிர்கள் அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்திருந்த விவசாயிகளுக்கு பெரிய இடியாக நெற்கதிர்களில் மஞ்சள் பழ கட்டிபோன்ற பூஞ்சைகள் தாக்கியுள்ளது. இதனால் வயல்களில் 1 ஏக்கருக்கு 40 சதவீதம் வரை நெற்கதிர்கள் வீணாகியதை விவசாயிகள் வேதனையுடன் முதன் முதலில் நக்கீரன் இணையத்தில் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

 Echo of Nakkeeran's message; Farmers thanking Nakkeeran

அதனை தொடர்ந்து இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த தொலைகாட்சி செய்தி ஊடகங்கள் அங்குள்ள பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்தது. இதனால் அரசின் விவசாயதுறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கனவத்திற்கு சென்றதால் விவசாய துறை அதிகாரிகளை சம்பந்தபட்ட வயலுக்கு சென்று அய்வு செய்து அறிக்கை அனுப்பும் படி உத்திரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட மீதிகுடி கிராமத்திற்கு கடலூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் முருகன், கரும்பு ஆராய்சி பூச்சியல்துறை உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை உதவி இயக்குனர் விஜயராகவன்,வேளாண் அலுவலர் ரமேஷ், உதவி அலுவலர்கள் சிவசங்கரன், மச்சேந்திரன் அடங்கிய குழுவினர் பாதிக்கப்பட்ட நெல்வயலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

Echo of Nakkeeran's message; Farmers thanking Nakkeeran

Advertisment

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணைஇயக்குநர் முருகன் இதனை கடந்த காலங்களில் நெற்பழம் என்று கூறுவார்கள். மகசூல் அதிகம் உள்ளபோதும் பருவ நிலை மாற்றத்தாலும் வயல்களில் ஈரப்பதம் இருந்து கொண்டு இருந்தால் இதுபோன்று வரும். இது காற்றில் பரவகூடிய பூஞ்சை நோய் (பால்ஸ்மொட்). இது வைரஸ் நோய் அல்ல. இதனால் அதிக பாதிப்பு ஏற்படாது என்று கூறிய அவர் இந்த வாரத்தில் இதனால் மனவேதனை அடைந்துள்ள விவசாயிகளை அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த நோய்குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறினார்.

Echo of Nakkeeran's message; Farmers thanking Nakkeeran

வேளாண்அதிகாரிகள் ஆய்வு குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில் வந்தவர்கள் எங்களை சமாதனம் செய்யும் நோக்கில் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பாதிக்குமேல் பாதிப்பு உள்ளது. இதனை அவர்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் நக்கீரன் செய்தி உள்ளிட்ட ஊடகங்கள் இல்லை என்றால் இந்த பகுதியை யாரும் திரும்பி பார்த்திருக்கமாட்டார்கள் எனவே இந்த செய்தியை உலகிற்கு காட்டிய ஊடகத்திற்கு மிக்க நன்றி என கனத்த இதயத்துடன் கூறினார்கள் நமக்கு சோறுபோடும் விவசாயிகள்.

Cuddalore agricultural lands Farmers nakkheeran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe