விழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..

Electric post மின் கம்பம்

விழுப்புரம் அருகே மின்சார வாரிய ஊழியர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது சிறுகடம்பூர் இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மொடையூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணி செய்துவருகிறார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் மொடையூரில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி அதில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து ராஜேந்திரன் தவறிகீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சக ஊழியர்கள் மீட்டுசெஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போய்விட்டார்.

இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சந்தியா என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

மின்சார பணியில் இருக்கும்போது உயிரிழந்த ராஜேந்திரன் நிலை கண்டு சக ஊழியர்கள் பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

RB villupuram
இதையும் படியுங்கள்
Subscribe