Advertisment

நாமக்கல்லில் நில அதிர்வா? அதிகாரிகள் ஆய்வு

 Earthquake in Namakkal? Officers review

நாமக்கல் மாவட்டத்தில் இன்று பல பகுதிகளில்பயங்கர சத்தத்துடன்அதிர்வுஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இன்று மதியம் ஒரு மணி அளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், மோகனூர். ப.வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சில நொடிகள் மட்டுமே கேட்கப்பட்ட இந்த சத்தத்தால் வீடுகளில் லேசான அதிர்வு ஏற்பட்டது. பறவைகளும் கூட்டம்கூட்டமாகப் பறந்து சென்றது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த அதிர்வு குறித்து அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கடந்த 2020 ஆம் ஆண்டும் இதே போல் சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. அதுவும் பகல் வேளையில் ஏற்பட்டது. சூப்பர்சோனிக் விமானங்கள் இயக்கப்படும் போது வெளியாகும் காற்றின் சத்தம் தான் இந்த ஒலிக்கான காரணம் எனத்தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து இந்த அதிர்வு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

earthquake inspection namakkal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe