Published on 29/04/2021 | Edited on 29/04/2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் அஞ்சுகிராமம், அழகப்புரம், சுசீந்திரம் ஆகிய இடங்களில் ஒரு சில வினாடிகள் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதேபோல் சின்னமுட்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். அதேபோல் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம், திங்கள் சந்தை பகுதியிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.