
சென்னையில் சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகச் செய்திகள் வெளியாக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக அண்ணா சாலை, அண்ணா நகரில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மறுபுறம் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியின் காரணமாக இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தாத தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. அதே நேரம் சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என வானிலை மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.