Advertisment

அதிகாலை விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!

road

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த தியாக ஈஸ்வரன்,ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவரது மனைவி ஜெயா. ஜெயாவின் தாயார் இறந்துவிட்டதால்,துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். செஞ்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

Advertisment

இந்தநிலையில், நேற்று அதிகாலை திண்டிவனத்துக்கு அருகே ஒலக்கூர் என்ற இடத்தில் வந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி உள்ளது. இதனால் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் தியாக ஈஸ்வரன், ஜெயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவருடன் காரில் பயணித்த அவர்களது மகன் இமானுவேல் மற்றும் ஆனந்த் லிபன், கார் ஓட்டுநர் கண்ணன் ஆகிய நால்வரும் பலத்த காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.

Advertisment

மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், இம்மானுவேல் மட்டும் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் விபத்தில் உயிரிழந்துள்ளது அவர்கள் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தைச் சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

incident Tindivanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe