Advertisment

காலையிலேயே அதிரடி; ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!

Early morning action; Firing on the raider

திண்டுக்கல்லில் ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவுடி ரிசார்ட் சச்சின். இவர் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே இர்பான் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரிச்சர்ட் சச்சினை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தில் இருந்து கைப்பற்ற அழைத்துச் சென்ற பொழுது காவலர் அருண் என்பவரை ரவுடி ரிச்சர்ட் சச்சின் தாக்கியுள்ளார். இதனால் பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ரவுடி ரிச்சர்ட் மீட்கப்பட்டு தற்பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரவுடி தாக்கியதில் காயமடைந்த காவலர் அருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலையிலேயே நிகழ்ந்த இந்த துப்பாக்கிசூடுசம்பவத்தால்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police rowdy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe