Published on 09/01/2025 | Edited on 09/01/2025

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில் இன்று காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது காலையிலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டதோடு ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கை கடற்படையினர் விரட்டி கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.