இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், முன்னெச்சரிக்கையாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் மையங்களைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு இன்று (07/03/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான பயணமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.