தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கைகளை அமலில் இருக்கும் நிலையில்இ-பாஸ்முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழக அரசுஇ-பாஸ் பெறுவதற்கான தளர்வுகளை நேற்று முதல் அமலுக்கு கொண்டுவந்தது.அதன்படி விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் நேற்று இ-பாஸ் வழங்கப்பட்டது.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுடைய எண்ணிக்கை அதிகரித்ததால் சென்னையின் எல்லையான பரனூர் டோல்கேட்டில்கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து20 ஆயிரம் பேருக்குஇ-பாஸ்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.வழக்கமாகசராசரியாக 15 ஆயிரம்இ-பாஸ்கள் மட்டுமேவழங்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில்1.2 லட்சம் பேருக்குஇ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.