ADVERTISEMENT

ஆவின் பால் பாக்கெட்டில் “ஈ”

12:12 PM Sep 21, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் ஆவின் விற்பனை நிலையத்தில் விற்கப்பட்ட பாலில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை ஆவின் சார்பில் அனைத்து வகையான பால் பாக்கெட்களையும் சேர்த்து நாள் ஒன்றிற்கு 5 லட்சம் வரை பால் பாக்கெட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் ஆவின் பால் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ கிடந்ததால் அதை வாங்கிய நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தார். பால் பாக்கெட்டிற்குள் ஈ மிதந்ததை வீடியோவாக எடுத்துக் கொண்டதுடன் வாங்கிய பால் பாக்கெட்டை திரும்ப ஆவின் விற்பனை நிலையத்திலேயே அதை ஒப்படைத்தார்.

மேலும் இது தொடர்பாக ஆவின் பால் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆவின் நிறுவனம் சார்பில் ஈ இருந்த பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு அதற்குறிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பால் பாக்கெட் பேக்கிங் செய்யும் பொழுது தவறுதலாக ஈ விழுந்திருக்கலாம் எனவும் இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காது எனவும் ஆவின் அதிகாரிகள் நுகர்வோரிடம் விளக்கமளித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT