Advertisment

இ-பைக் எரிந்து விபத்து; மூன்று பேர் படுகாயத்துடன் மீட்பு

fire accident

மதுரவாயல் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த இ-பைக் எரிந்து விபத்தான நிலையில் மூன்று பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை மதுரவாயல் இந்திராகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். மேல் தளத்தில் நடராஜன் வசித்து வந்த நிலையில் கீழ்தளத்தில் அவருடைய மகன் மற்றும் மருமகள், குழந்தை ஆகியோர் வசித்து வந்தனர். இரவு நடராஜன் தன்னுடைய பேட்டரி இருசக்கர வாகனத்தை சார்ஜ் போட்டுவிட்டு கீழ்தளத்தின் வீட்டின் முன் பக்கத்தில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.

Advertisment

இதில் அவருடைய மகன் கௌதமன், மருமகள் மஞ்சு, ஒன்பது மாதக் குழந்தை எழிலரசு ஆகிய மூவரும் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை கௌதமன், குழந்தை எழிலரசு ஆகியோர் 50 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேட்டரி இருசக்கர வாகனத்தை சார்ஜ் செய்த பொழுது ஏற்பட்டவிபத்தில் மூவர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe