Advertisment

சந்திப்பு முடிவு;தேமுதிக பாஜக கூட்டணி இழுபறி?

தற்போது பாஜக தமிழக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டணி குறித்து பேசதேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

Advertisment

 Dwight BJP coalition meet

சென்னை கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக பாஜக இடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுகூட்டணி குறித்த ஒப்பந்தம்கையெழுத்தானது. அதனையடுத்து தேதிமுக உடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தபாஜக தமிழக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் பாஜக முக்கிய பொறுப்பாளர்கள் கூட்டணி குறித்து பேசதேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பியூஸ் கோயல் வாயிலில் எல்கே. சுதீசுடன் 5 நிமிடம் தனியாக பேசிவிட்டு மீண்டும் உள்ள சென்றார்.

meet

Advertisment

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் இது மரியாதை மற்றும் அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்கான சந்திப்பு என கூறினார். மோடி மற்றும் அமித்ஷா விஜயகாந்த் பற்றி விசாரித்ததாகவும், மேலும் விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்பதால் மரியாதையை நிமித்தமாக நடந்த சந்திப்பு எனகூறினார்.

இந்நிலையில்தேமுதிக பாஜககூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவே தகவல்கள் வந்துள்ளன.

dmdk piyushgoyal vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe