Advertisment

 டோக்கன் கொடுத்த டிடிவி அணி! பணம் கொடுத்தால்தான் ஓட்டு என திருப்பி கொடுத்த ஓபிஎஸ் தொகுதி மக்கள்!

p3

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் உள்ள அரண்மனை புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குநர்கள் மூலம் தலைவர் மற்றும் இயக்குனர்கள் எடுப்பதில் கட்சிகார்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Advertisment

அதனால் கூட்டுறவு சங்க அதிகாரி தேர்தல் நடத்த முடிவு செய்தார். அப்படி இருந்தும் கூட மூன்று பெண் இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள எட்டு இயக்குனர்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Advertisment

p2

இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், டிடிவி ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் களத்தில் குதித்து இருக்கிறார்கள். இருந்தாலும் பொதுத் தேர்தல் போல் இரண்டு அணிகளுமே சங்க உறுப்பினர்கள் 5000 பேரில் பெரும்பாலான பேருக்கு பொதுத் தேர்தல் போலவே ஓட்டுக்கு பேரம் பேசி ஆயிரம் இரண்டாயிரம் என ஓட்டுக்கு பணம் கொடுத்தும் இருக்கிறார்கள். இதில், டிடிவி அணியியினர் ஆர்.கே.நகர் தேர்தல் போல் டோக்கன் கொடுத்தும் இருக்கிறார்கள். இதில் பல உறுப்பினர்கள் ஆர்.கே.நகர் மக்களுக்கு டோக்கன் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றது போல் இங்கு வெற்றி பெற முடியாது. பணம் கொடுத்தால்தான் ஓட்டு என கூறி பலர் டோக்கனையும் திருப்பி கொடுத்து விட்டனர். அப்படி இருந்தும் டிடிவி அணி தேர்தலில் வெற்றி பெற்று நாங்க தான் தலைவராக வருவோம் என நான்கு பேரும் வாக்காளர்களை கொட்டும் மழையிலும் கவர் பண்ணிவருகிறார்கள்.

p1

அதுபோல் அதிமுக அணியை சேர்ந்த எட்டு பேரும் நாங்க தான் தலைவர் மற்றும் இயக்குனரரக வருவோம் அப்படி வந்தால் தான் ஆளும் கட்சி மூலம் உறுப்பினர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்ய முடியும். அதுனால எங்க அணிக்கு வாக்களியுங்கள் என்று வாக்காள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டியும் வருகிறார்கள். இப்படி இரு அணிகளுக்கு இடையே போட்டி கடுமையாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு தேர்தலும் விருவிருப்பாக நடந்து வருகிறது.

ops podi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe