duty of MLA to get magalir urimai thogai say  Minister Udhayanidhi

Advertisment

“மகளிர் உரிமைத் தொகை பெற்றுத் தருவது எம்.எல்.ஏ.க்களின் கடமை” என அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான இன்று பேரவையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ குறித்துகவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்விதிகளை பூர்த்தி செய்கிற அத்தனை மகளிருக்கும் உரிமைத் தொகை பெற்றுத் தருவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை - பொறுப்பு - உரிமை. விண்ணப்பிக்காத மகளிர்கள், புதிய விண்ணப்பங்களைத்தரலாம்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.தகுதியுள்ள ஒருவர் கூட ‘கலைஞர் மகளிர் உரிமை’ திட்டத்திலிருந்து விடுபடாத வகையில் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படும்” என்று உறுதியளித்தார்.