இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்து மத்தியில் பாஜக கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தது.மேலும் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் பெற்றது.இதனால் அதிமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன் வெற்றிபெற்றார்.இந்த தொகுதியில் அதிமுகவில் பிரிந்து வந்த மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிட்டு 27,456 வாக்குகள் பெற்று அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 27ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.