Advertisment

கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவனின் மூக்கிற்குள் மீன் சிக்கி கொண்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார், அந்த பகுதியில் இருந்த கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் சிறிது நேரம் குளித்தும், நீருக்குள் நண்பர்களுடன் விளையாடியுள்ளார். நீருக்குள் மூழ்கி விளையாடும் போது அருள்குமாரின் மூக்கிற்குள் ஏதோ உள்ளே நுழைந்தது போல் இருந்துள்ளது. சிறிது நேரத்தில் மூக்கில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருள்குமாரின் நண்பர்கள் அவனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் வலி இன்னும் அதிகமாக ஏற்பட்டு துடித்த சிறுவனை பெற்றோர்கள் மற்றும் அங்கு இருந்தவர்கள் பதறிப்போயுள்ளனர்.

Advertisment

incident

இதனையடுத்து உடனடியாக அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அருள்குமாரை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் கதிர்வேல், சிறுவனின் மூக்கிற்குள் உயிருடன் மீன் இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் மூக்கிற்குள் உயிருடன் சிக்கிக் கொண்டிருந்த சிலேபி மீனை மருத்துவர் கதிர்வேல் வெளியே எடுத்தார். அதன் பின்பு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் மூக்கிற்குள் மீன் சிக்கிக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Doctor incident Operation school student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe