கணவருடைய கொள்கை வேறு.! தன்னுடைய கொள்கை வேறு என ஆன்மிக பயணத்தில் வளைய வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா வெள்ளிக்கிழமையன்று பிள்ளையார் பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/durga Stalin 2.jpg)
கடவுள் மறுப்புக் கொள்கையுடைய திராவிடப் பாரம்பரிய கட்சித் தலைவரின் மனைவியாக இருந்தாலும் தன்னுடைய கணவன், குடும்பத்தாருக்காக ஆன்மிக விசயங்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு கோவில், குளம், கோ பூஜை என வலம் வருபவர் துர்கா ஸ்டாலின்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/durga Stalin 1.jpg)
வெளியில் கடவுள் மறுப்பு என முழங்கினாலும் தன்னுடைய மனைவி துர்காவின் ஆன்மிக விவகாரங்களில் தலையிடுவதில்லை திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்திற்கு வந்தவர் சுவாமி தரிசனம் செய்தவர் கோவிலின் வெளியே நின்ற பசுமாட்டையும் தொட்டு வணங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/durga Stalin 3.jpg)
கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பிள்ளையார்பட்டி தலைமை குருக்கள் பிச்சைகுருக்கள் வரவேற்க, பிள்ளையார்பட்டியின் நகரத்தார்களோ, "கற்பக விநாயகர் புகைப்படம் உள்ளிட்ட அர்ச்சனை பொருட்களை துர்கா ஸ்டாலினுக்கு வழங்கினர். இதே வேளையில், கோவிலுக்கு சுவாமி கும்பிட வந்தவர்கள் துர்கா ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Follow Us