திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஏற்கனவே வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்த நிலையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பிஇகல்லூரி, சிபிஎஸ்சி பள்ளியில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையும்சோதனையில் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்து வரும் நிலையில் மகனின் பள்ளி மற்றும் கல்லூரியில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.