Duraisamy appointed Chief Justice of the High Court

Advertisment

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Duraisamy appointed Chief Justice of the High Court

இந்த நிலையில், அவர் பொறுப்பேற்கும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.