வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அடுத்து மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
இரவு நேரம் என்பதால் காலையில் சோதனை நடத்தலாம் என்று திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் அதிகாரிகளை சோதனையிட அனுமதிக்காமல் வாக்குவாதம் செய்து வருகிறார்.