ops

துரைமுருகன் இன்று கலர்புல்லாக உள்ளார்.. உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Advertisment

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பேரவையில் இன்று கே.வி.குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன், தனது தொகுதியை புதிய வட்டமாக மாற்ற வேண்டும் என வருவாய்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு அமைச்சர் உதயகுமார் ஏற்கனவே அம்மாவின் அரசு 72 வட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பதிலளித்தார்.

Advertisment

இதைத்தொடர்ந்து பேசிய துரைமுருகன், 73வது வட்டத்தை அம்மாவின் அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதனையடுத்து, அம்மா அரசு என கூறியதற்கு துரைமுருகனுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய துரைமுருகன், வட்டத்தை ஏற்படுத்தினால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்று கூறியவுடன் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதற்கிடையில், இன்று துரைமுருகன் கலர்புல்லாக உள்ளார். என்றும் 16 ஆக அவர் உள்ளார். உங்கள் இளமையின் ரகசியம் என்ன என? ஓபிஎஸ் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ்-சின் பேச்சால் அவையில் நீண்ட சிரிப்பலை ஒலித்தது.

Advertisment