ADVERTISEMENT

“என் க்ளாஸ்ல 19 பொண்ணுங்க.. அதுக்கெல்லாம் ராசி வேணும்” - அரங்கை அதிர வைத்த அமைச்சர் துரைமுருகன்

11:55 PM Feb 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது கல்லூரி காலத்தை நினைவுபடுத்தி அமைச்சர் துரைமுருகன் பேச அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சிக் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பள்ளிகளை சீரமைக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிகளை பார்க்கும் பொழுதே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரவேண்டும். எனக்கு அப்படி தான் வந்தது.

நான் முதல் முறை சென்னையை பார்த்ததும் மிரண்டு விட்டேன். பச்சையப்பா கல்லூரியில் படித்தால் தான் படிப்பேன் என்று படித்தேன். கொஞ்ச நாள் கழித்து பிரசிடென்சி கல்லூரி எதிரில் பீச் இருந்தது. அடடா இதை விட்டுவிட்டோமே என நினைத்து அதற்காகவே எம்.ஏ படித்தேன். அதன் பின் சட்டக்கல்லூரியில் படித்தேன்.

அமைச்சர் பொன்முடிக்கு ஒரே வருத்தம். ஒரே ஒரு பெண் தான் தன் கல்லூரி வகுப்பில் படித்தது என நெடுநாளாக சொல்லி வருகிறார். நான் எம்.ஏ படிக்கும் போது எனது வகுப்பில் 19 பெண்கள். ஆண்கள் 5 பேர் தான். அதுக்கெல்லாம் ஒரு ராசி வேண்டும். வேலூரில் பள்ளிகளை சீரமைக்கும் பணியை முதல்வர் செய்து கொடுக்கிறார்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT