அமலாக்கத்துறை சோதனை; பாடலால் பதில் தந்த அமைச்சர் துரைமுருகன்!

Duraimurugan sang a song about enforcement raids at ponmudi house

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசால் தொடர்ந்து ஏவப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த சோதனை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே என எம்.ஜி.ஆரின் படலை பாடி பதிலளித்துள்ளார்.

Ponmudi
இதையும் படியுங்கள்
Subscribe